Close
ஏப்ரல் 4, 2025 3:17 காலை

நிலத்தராறில் பெண்ணின் மூக்கை அறுத்த உறவினர்..! மூக்கை பையில் எடுத்துக்கொண்டு ஓடிய பெண்..!

மூக்கு வெட்டப்பட்ட குக்கிதேவி

ராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பெண் துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த குக்கிதேவி. அவருக்கு வயது 40 . குக்கி தேவி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவர்களது கிராமத்தில் நிலம் தொடர்பாக உறவினர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், குக்கி தேவி மற்றும் அவரது மகன் பிரிச்னைக்குரிய நிலத்தை பார்வையிட்டனர். அப்போது மருமகன் ஓம்பிரகாஷ் மற்றும் குக்கி தேவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியது.

அப்போது குக்கி தேவியை உறவினர்கள் சிலர் பிடித்துக் கொண்டனர். அப்போது ஓம் பிரகாஷ் கத்தியால் சர சரவென அவரது மூக்கை அறுத்து துண்டித்தார். வலியால் துடித்து கதறிய குக்கிதேவி, உடனே துண்டிக்கப்பட்ட மூக்கை ஒரு பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலுதவி அளித்த டாக்டர் மகேஸ்வரி கூறும்போது:

மூக்கின் பெரும்பகுதி வெட்டப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மட்டுமே மூக்கை மீண்டும் இணைக்க முடியும், என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top