மதுரை:
மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது.
இதை அடுத்து, விநாயகர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதே போல, மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம் தாசில்தார் அருள்மிகு சௌபாக்கியவிநாயகர் ஆலயம்,
வரசித்தி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் ஆலயம், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்களில் சங்கடஹர சத்தியம் முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக, சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கோயில்களில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணி விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.