அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பாசன பகுதி இரு போக விவசாயத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் இரண்டாம் போக பருவதற்கான நெல் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை கோட்டைமேடு தண்டலை கொண்டையம்பட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக முதல் போக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் அடைந்தனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்பொழுது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது இப்பகுதி விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் மேலும் விவசாயப் பணியை டாஃபே கம்பெனியின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 254 டிராக்டரில் தீவிரமாக உழவு பணியை தண்டலையை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்ற பூக்கினியான் உள்ளிட்ட விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.