மதுரை :
மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் சுரேஷ். முகில் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான டேவிட் சுரேஷ். நிறைய புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மதுரை காளவாசல் பகுதியில் தேவதையும் ராட்சசியும் என்னும் புதிய விழிப்புணர்வு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கி தனது நண்பர்களுடன் நடிக்க உள்ளார்.