மதுரை :
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் எஸ்.எஸ்.குமார் மதுரை மாவட்டம் உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசனகுளங்கள் மறு சீரமைப்பு குறித்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மதுரை கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா ரானா,ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரா பிரதாப் சிங் ,தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கண்காணிப்பு பொறியாளர் குற்றாலிங்கம, செயற்பொறியாளர் ராஜேஷ்,செயற் பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி) இந்துமதி ஆகியோர் உடன் உள்ளனர்.