Close
டிசம்பர் 19, 2024 4:39 மணி

சாலவாக்கத்தில் அமித் ஷாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!

சாலவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், சட்டமேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் அமித்ஷா டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தமிழகம் மட்டும் இன்றி மத்தியிலும் அமித்ஷா அவர்களின் உருவ பொம்மைகளை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் ஊராட்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் ஏம்ஏல்ஏ அறிவுறுத்தலின் படி, டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி. குமார் தலைமையிலும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.வெங்கடேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட திமுகவினர், கையில் அம்பேத்கர் திருவுருவ படத்தின் பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு அம்பேத்கரை இழிவு படித்திய அமித்ஷா அவர்களை கண்டிக்கிறோம், அம்பேத்கருக்கு எதிராக பேசியதை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top