Close
மார்ச் 31, 2025 12:27 மணி

இனிமேல் ‘ஹேஷ்டேக்’ வேணாங்க..! எலான் மஸ்க் சொல்றாரு..!

கோப்பு படம்

சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் பயன்படுத்துவதை பயனர்கள் நிறுத்த வேண்டும். அது நன்றாக இல்லை என்று எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களை அல்லது போடும் தலைப்புகளை வலிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல் ஆகும். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான், இந்த ஹேஷ்டேக்.

சில செயல்பாடுகள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கவும் உடனடியாக பிரபலப்படுத்தவும் உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கி இருக்கிறார். அதற்குப்பின்னர் அவர் டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி பறப்பது போல இருந்த லோகோவை மாற்றினார்.

டுவிட்டர் என்ற பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றினார். ஆனால் மக்கள் மத்தியில் அந்த பெயர் எடுபடவில்லை. இன்றளவும் பயனர்கள் டுவிட்டர் என்றுதான் கூறுகின்றனர். இந்த சூழலில், ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் :

ஹேஷ்டேக்குகள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். சிஸ்டத்துக்கு இனியும் அவை தேவையில்லை. ஹேஷ்டேக் அசிங்கமாகத் தெரிகின்றன. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top