Close
டிசம்பர் 23, 2024 7:09 மணி

காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள்

அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு 154 வேலை வாய்ப்பு உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் அலுவலர் தெரிவித்துள்ளார்..

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் 9 தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று பல்வேறு நபர்கள் பணிகள் பெற்று தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த மாதத்திற்கான தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாம் , வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் துணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சம்பளம் பிற சலுகைகள் குறித்து வேலை நாடுனர்களுக்கு தெரிவித்தனர்.

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என தங்கள் சுய விவர குறிப்புடன் தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரதிநிதிகள் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டு பதிவு செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் நிர்மலா தேவி, அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top