Close
ஏப்ரல் 2, 2025 5:54 காலை

மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

புதுப்பட்டியில் நடந்த மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம்

வாடிப்பட்டி :

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் புதுப்பட்டியில் நடந்தது.

இந்த முகாமினை, குறிஞ்சி வட்டாரக் களஞ்சியம் தலைவி வள்ளி துவக்கி வைத்தார். வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக் குழு வழக்கறிஞர்கள் செல்வகுமார், விஜயகுமார், தயாநிதி, சீனிவாசன், சுமிதா, சாந்தி ஆகியோர் மகளிருக் கான பல்வேறு சட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். முடிவில், சட்ட பணி தன்னார்வலர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top