Close
ஏப்ரல் 3, 2025 12:11 மணி

மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..!

வேளாண்துறை அதிகாரிகளிடம் மனு அளித்த விவசாயிகள்

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

காரியாபட்டி வட்டாரத்தில், கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக , காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள அல்லாளப்பேரி, பாப்பணம், டி.கடம்பன்குளம், போன்ற கிராமங் களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் தண்ணீரில் மூழ்கியது.

பல லட்சங்களை முதலீடாக நெல் பயிரிடப்பட்டு வந்த விவசாயிகள் வாழ்வாதாரம் முழுவதும் இழந்து நிராயுதாபாணியாக உள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top