Close
டிசம்பர் 24, 2024 2:28 காலை

மைத்துனருடன் மகனை கொன்ற தந்தை..! குளத்தில் மிதந்த உடல் விசாரணையில் அம்பலம்..!

கொலை செய்த காத்தவராயன் மற்றும் ராஜேஷ்

காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது சின்ன குளம். கடந்த 15 தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளம் முழுவதும் நிரம்பி இருந்த நிலையில்  நேற்று அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் சிலர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக பாலு செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட முனுசாமி

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாலு செட்டி காவல்துறையினர் குளத்தில் மிதந்த சடலத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு எடுத்தபோது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களும், இடுப்பு பகுதியில் சிமெண்ட் கல்லால் கட்டப்பட்டு வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

மேற்படி சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து பாலு செட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இறந்த நபர் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என தெரியவந்தது. மேலும் அவரது பெற்றோர் காத்தவராயனிடம் விசாரணை மேற்கொண்டபோது முரண்பட்ட தகவல் தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த காவல்துறை தொடர் விசாரணையில் காத்தவராயன் தனது மைத்துனன் ராஜேஷ் உடன் இணைந்து இச் சம்பவத்தை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.

காத்தவராயன் மற்றும் அவரது மனைவியை தொடர்ந்து முனுசாமி துன்புறுத்தி அடித்து வந்ததாகவும், இதனால் இது குறித்து தனது மைத்துனர் ராஜேஷிடம் தெரிவித்த நிலையில் இச்சம்பவத்தை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு இன்று நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top