காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமினை மேயர் மாகலட்சுமி துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்று பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்து பத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண், இருதயம், மனநலம், தொழுநோய், சித்த மருத்துவம் ஆகியவைகளும், டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி, ரத்தம், பிபி உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் மருந்துகள் வழங்கப்படுகிறது.
இதில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள் மீனாட்சி மருத்துவமனை மற்றும் டாக்டர்ஸ் பார் யூ உள்ளிட்ட குழு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முகாமில் காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதாரம் மற்றும் மருத்துவம் பணி குழு தலைவர் சங்கர், மாநகராட்சி நகர் மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் நம்பி, திருப்புட்குழி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்