Close
டிசம்பர் 23, 2024 11:59 காலை

கள்ளிக்குடியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா..!

சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாடல் பாடும் மாணவி

மதுரை:

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தூய இருதய பள்ளியில், சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் அருட்தந்தை பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்
களாக, அருட்தந்தை ஆரோக்கியதாஸ், மறை மாநில அதிபர் டாக்டர் சிஜித் லைசான்டர், பள்ளி செயலாளர் எட்வர்ட் ராயன் அருட்தந்தை அந்தோணி ராஜ், அருட்தந்தை ஜோசப், அருட்தந்தை பால்ராஜ், அன்னை தெரசா மீனம்பட்டினம் ஆதி மூலம், அருட் சகோதரிகள் விக்டோரியா, எலிசபெத், போதகர் கள்ளிக்குடி வெஸ்லி, பால்ராஜ் சென்னம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், தலைமையாசிரியை காளீஸ்வரி உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டதுடன் மாணவ, மாணவிகள் கலந்து
கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் அமைத்த கிறிஸ்துமஸ் குடில்களை சிறப்பு விருந்தினர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top