Close
டிசம்பர் 23, 2024 8:28 மணி

சோழவந்தான் அருகே ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம்..!

பெண்களின் முளைப்பாரி ஊர்வலம்

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே, அய்யப்பன் நாயக்கன்பட்டியில், அமைந்துள்ள ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் குத்துவிளக்கு பூஜை அன்னதானம் நடைபெற்றது.

முளைப்பாரி ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் முளைப்பாரியை கரைத்தனர். முன்னதாக பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வழிபாட்டு மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ராதிகா மகாலிங்கம், இந்திராணி முருகேசன், முத்துலட்சுமி செல்வம், சோலையப்பன், நிதிஷ்குமார் பாண்டி ராஜலட்சுமி ராஜேஸ்வரி கார்த்திக் ருக்குமணி முத்துராமன், பேச்சியம்மாள், சுசிலா, ஜோதி,கிருஷ்ணவேணி, கலுவாயி பிச்சை உள்பட ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓம் சக்தி செல்வராணி கந்தசாமி குடும்பத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து, இருபதாவது ஆண்டாக ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்துடன் நாளை இரவு இரண்டு பேருந்துகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வழிபாட்டுக்கு செல்வதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top