தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவிக்கும் நிலையை தவிர்க்க தமிழக உணவுத்துறை சார்பில் நியாய விலை கடைகளின் மூலம் விலையில்லா அரிசி மற்றும் குறைந்த விலையில் சர்க்கரை , கோதுமை , சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நியாய விலை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு போதிய கட்டிடங்கள் இருக்கும் நிலையில் பல கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா நகர் பகுதியில் செயல்படும் நியாய விலைக் கடை களில் ராகவேந்திரா நகர் திருப்பதிக்குன்றம் அருணாச்சலம் நகர் சுமார் 950 குடும்ப அட்டைதாரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொருட்களைப் பெற்று செல்லுகின்றனர்.
இந்நிலையில் இந்த நியாய விலை கடைக்கு குறிப்பாக பெண்கள் வர பெரும் அச்சப்படுகின்றனர். இந்த நியாய விலை கடை மிகுந்த சேதம் அடைந்து பொருட்கள் வாங்கும் பகுதிக்கு மேல் உள்ள பகுதி எப்போ விழுமோ ? என்ற அச்சம் பொதுமக்களிடமும், பொருட்கள் வைக்கும் வரை மற்றும் எடை போடும் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பழுதடைந்து அபாயத்துடனே ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் மழைநீர் உட்பகுவதை தவிர்க்க கட்டிடம் முழுதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு கல் கட்டி விடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் அச்சத்துடனே இங்கு செல்லும் நிலையை தவிர்க்கவும் , பொது மக்களுக்கு ஆபத்து நிகழும் முன்பு அதனை முழுவதும் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு புதிய நியாய விலைக் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஒரு நிலையில் இப்பகுதிக்கும் ஒரு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.