கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொண்டுவந்து தமிழகத்தில் கூடும் கேரளா மருத்துவமனைகள் மீது தமிழ்நாடு அரசிவ்க்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கேரளாவில் இருந்து வரும் அத்தனை வாகனங்களையும் சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை இடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தை குப்பைத்தொட்டியாக் நினைத்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டின் ஓட்டுனர்கள் இதற்கு துணைபோவது வேதனியான் விஷயம். பணத்துக்காக நமது தாயை விற்பதற்குச் சமம் என்பதை அந்த லாரி ஓட்டுனர்கள் வெட்கப்படவேண்டும்.
கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரியை சிசி டி.வி காட்சிகள் அடிப்படையில் கைப்பற்றி அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டிச் செல்வது வழக்காம உள்ளது. .தென்காசி வழியே லாரிகளில் கொண்டுவரும் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் கொட்டி வந்தனர். .
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு கிடக்கின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.
கடந்த டிசம்பர் 19ம் தேதி, திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்’ என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று (21ம் தேதி) கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள், கேரளாவின் இறைச்சிக்கழிவுகள் போன்ற குப்பைகளை துணிச்சலுடன் தமிழ் நாட்டுக்குள் கொண்டுவந்து கொட்டும் கேரளா மாநில மருத்துவமனை மற்றும் வியாபாரிகளின் மனநிலை எவ்வளவு மோசமானது என்பது தெளிவாகிறது.
நம்மிடம் காய்கறிகள்,மணல், ஜல்லிகள் போன்ற தாதுக்களை வாங்கும் கேரளா நமக்கு காட்டும் நன்றிக்கடன்தான் குப்பைகளை தமிழ்நாட்டில் கொட்டுவது. இதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. கேரளவில் இருந்து வரும் லாரிகளை சோதனைச் சாவடிகளில் துல்லியமாக சோதனை இடவேண்டும்.
நமது சோதனை அதிகாரிகள் கடுமையானவர்களாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் என்று கண்டறிந்தால் அவர்கள் மீது இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் பாயவேண்டும்.
கழிவுகள் எந்த மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டதோ அந்த மருத்துவமனையின் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் பாயவேண்டும். வெறும் அபராதம் மட்டும் தீர்வைத் தராது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.