Close
மே 21, 2025 11:10 காலை

சோழவந்தானில் அடகு கடை பைனான்சியர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..!

அடகுக்கடை உரிமையாளர்களின் ஆண்டுக்கூட்டம்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள அடகு கடை பைனான்சியர் நலச்சங்கத்தின் 23 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இருளப்பன் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள அடகு கடை பைனான்சியர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top