Close
டிசம்பர் 23, 2024 3:09 மணி

காஞ்சிபுர மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி பட்டறை..!

காஞ்சிபுரத்தில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் யிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கௌதம் காமராஜ் தலைமையில் நடைபெற்றது .

இதில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ‌சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி. ஆர் .ராஜ் சத்யன் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .

உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ். ஆர்.சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைக்காக கொண்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகும் வகையில் , ஆளும் திமுக அரசின் தவறுகளை விரைவாக சுட்டிக்காட்டி தொடர்ந்து எடுத்த தகவல்களையும் திரட்டி  இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top