Close
டிசம்பர் 23, 2024 2:35 மணி

புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

சாலை ஓரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

புனேயில் நடைபாதை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரின், வகோலி சௌக் பகுதியில் நடைபாதை ஓரத்தில் 12 பேர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அப்பகுதி வழியாக வந்த லாரி ஒன்று நிலைதடுமாறி பாதை ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது ஏறியது.

இந்த சோக சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. லாரியை ஓட்டிவந்த 26 வயதான ஓட்டுநர் சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஓட்டுநர் போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் சங்கர் போதையில் லாரியை ஓடியதால்தான் லாரி கட்டுப்பாட்டை இழந்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழக்கும் சம்பவத்துக்கு காரணம். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top