காஞ்சிபுரம் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலை குமரியில் நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி திருவள்ளூர் படம் மற்றும் நூல்கள், புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்தார்.
ஐயன் திருவள்ளூரின் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு தற்போது 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் தமிழக அரசு சார்பில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த வெள்ளி விழா வாரத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், நூலகத்துறை வாசகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட பொது நூலக துறை சார்பில் சின்ன காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா முழு நேர கிளை நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் திருவள்ளுவர் புகைப்படம் மற்றும் அவரது நூல்கள் புகைப்படங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்து கண்காட்சியின் பார்வையிட்டார். இக்கண்காட்சியில் மாணவர்கள் வரைந்த திருவள்ளுவர் ஓவியங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வாசகர் வட்ட தலைவர் திருவேற்கோலம், இரண்டாம் நிலை நூலகர் ரவி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
இன்று துவங்கும் இக்கண்காட்சி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.