Close
ஏப்ரல் 3, 2025 11:44 மணி

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்.அருகில் எஸ்.பி..ஷண்முகம்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ,எஸ் பி சண்முகம் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தில் தற்போது போதை கலாச்சாரம் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து அனைத்து தரப்பினரிடம் புழங்கும் நிலையில் உள்ளது என தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து நாள்தோறும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது இது மட்டுமில்லாமல் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அவ்வகை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆயத்தீர்வை அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ் பி சண்முகம் இணைந்து துவக்கி வைத்தனர்.

இதில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கோஷங்கள் எழுப்பியும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்தவாறு சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி காவலன் கேட் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, மேட்டுத்தெரு வள்ளல் பச்சையப்பன் தெரு வழியா‌க சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோ ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆயத்தீர்வை அலுவலர் திருவாசகம், கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top