Close
டிசம்பர் 23, 2024 2:54 மணி

கீழே கிடந்த செல்போன், பணப்பையை ஒப்படைத்த நேர்மையாளருக்கு பாராட்டு..!

சாலையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கருப்பட்டியை சேர்ந்த லட்சர்கான்.

கீழே கிடந்த செல்போன் மற்றும் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டு.

சோழவந்தான் :

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் மதுரை அம்மன் சன்னதி அருகில் வெள்ளைப்பூண்டு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், வியாபார விஷயமாக கரூர் சென்று அங்கிருந்து மதுரை நோக்கி சென்ற போது வாடிப்பட்டி தனுச்சியம் பிரிவு அருகே சென்ற போது, இவரது பணப்பை கீழே தவறி விழுந்து விட்டது.

அதே வழியில் வந்த கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெட்சர்கான் சாலையில் கருப்பு கலரில் பை இருப்பது தெரிந்து, அதனை எடுத்து பார்த்துள்ளார். உடனே, பையில் செல்போன் ஒன்றும் 2500 ரூபாய் பணமும் இருந்துள்ளது.

மேலும் ,உள்ளே இருந்த முகவரியை வைத்து மதுரை அம்மன் சன்னதி அருகே உள்ள வெள்ளைப் பூண்டு கடைக்குச் சென்று செல்போன் மற்றும் ரூபாய் 2500 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

கீழே கிடந்த பணப்பை மற்றும் செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர் கருப்பட்டியை சேர்ந்த லட்சர்கான் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top