Close
டிசம்பர் 23, 2024 4:03 மணி

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டியில் விவசாயிகள் சார்பில் வைகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி 58 கால்வாய்பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரியும், வைகை அணையில் உள்ள மதகு பகுதியை 67 அடியிலிருந்து 62 அடியாக குறைக்க வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், 58 கால்வாய்க்கு நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தி, உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக, பார்வட் ப்ளாக், நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகார அமைப்பு உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top