சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு தென்கரை கிராமத்தில் நான்கு ரத வீதிகளில் அம்மன் வீதி உலா வந்தார்.
ஆங்காங்கே பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பல இடங்களில் தேங்காய் உடைத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.