திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டி தேர்வில் 12 பேர் இறுதிப் போட்டித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் – ஆட்சியர் கலைச்செல்வி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல் நிலைப் போட்டி தேர்வு காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முதல் நிலைப் போட்டித் தேர்வுக்கு ஆசிரியர்கள் 111 பேர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 8 பேர், பிற துறை அலுவலர்கள் 25 பேர் என மொத்தம் 144 பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் ஆசிரியர்கள் 63 பேர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 8 பேர், பிற துறை அலுவலர்கள் 16 பேர் என 87 பேர் தேர்வு எழுதினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் நிலைப் போட்டி தேர்வில் கூட்டுறவுத்துறை பள்ளிக்கல்வித்துறை இந்து சமய அறநிலைத்துறை ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை என பல துறைகளை சேர்ந்த நபர்கள் தேர்வெழுதிய 87 பேரில்
4 குழுக்களை சேர்ந்த 12 நபர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் வரும் 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப் போட்டித் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.