Close
டிசம்பர் 25, 2024 9:26 காலை

தேனியில் பாரதமாதா தேர் பவனி..!

பாரத மாதா

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரதமாதா தேர் பவனி நடந்தது.

தேனி  அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேர் பவனி தொடங்கியது. தேரில் பாரதமாதாவின் சிலை அமைக்கப்பட்டு மலர்கள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ தொடங்கி வைத்தார். நகர தலைவர் சிவராமன்ஜீ முன்னிலை வகித்தார். நிறுவனத்தலைவர் பொன்ரவிஜீ,  மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஜீ, நகர பொருளாளர் முத்துராஜ்ஜீ, உட்பட நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். FORES GROUPS அதிபர் மதளைராஜன் துவக்கி வைத்தார்.

பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயிலில் தொடங்கிய பாரதமாதா தேர்ப்பவனி, அல்லிநகரம், தேனி நேருசிலை வழியாக, மதுரை ரோட்டில் திரும்பி, பங்களாமேடு வழியாக மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. வழிநெடுக தேனி நகர பொதுமக்கள் பாரதமாதா சிலைக்கு வரவேற்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும், மலர்களை சூடியும் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top