Close
டிசம்பர் 26, 2024 11:51 காலை

காரியாபட்டி, கல்குறிச்சியில் நியூ லைஃப் பவுண்டேஷன் துவக்க விழா..!

காரியாபட்டி நியூ லைஃப் பவுண்டேஷன் சார்பில் நடந்த மருத்துவ முகாம்

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கல்குறிச்சியில் நியூ லைஃப் பவுண்டேஷன் துவக்க விழா நடைபெற்றது.

ஒன்றிய துணைத் தலைவர ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்
தங்க தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நியூ லைஃப் பவுண்டேஷன் நிறுவனர் டேவிட் பாலு வரவேற்றார்.

மல்லாங்கினர் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவினை முன்னிட்டு , இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், மருத்துவர் காமாட்சி, சங்கர், தலைமையில் மருத்துவர்கள் சுதர்சன் பாலமுருகன் தீபக்ராஜா, அனிஷா டேவிட் பாலு, குரு சந்தர் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

விழாவில் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகப்பிரியா, லயன்ஸ் கிளப் தலைவர் அழகர்சாமி, கிரின் ப வுண்டேசன் நிர்வாகி பொன்ராம். ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் சங்க துணை செயலாளர் செந்தில் குமார், உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, அமலா ஆய்வக நிறுவனர், முனீஸ்வரன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top