Close
ஜனவரி 13, 2025 4:34 மணி

அலங்காநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

போராட்டம் நடத்திய பாமகவினர்

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் மெய்யப்பன்பட்டி முருகன், மாவட்ட துணை தலைவர் பிரபு, அழகுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பு செயலாளர் ராஜாராம், விவசாய அணி பரணி, நிர்வாகிகள் தீரன், பரணி, ராஜ்குமார், வேல்முருகன், கிளை செயலாளர் நாராயணன், சாவடி பாக்யராஜ், சுந்தராஜன், வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top