வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் சபிதன் மற்றும் 19 வயது பிரிவில் சர்மா ஆகியோர் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாடுகின்றனர். இந்த மாணவர்களையும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பி.ஜி.ராஜா, செந்தில்குமார், சுரேஷ் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பஞ்சவர்ணம், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் எவர்கிரேட் ஹாக்கி கிளப் உறுப்பினர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.