திருவள்ளூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச எரிவாயு சிலிண்டர், ஆயிரம் பெண்களுக்கு சேலை உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திமுக திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஏற்பாட்டில் பூங்கா நகரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டு 12 பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர், ஆயிரம் பெண்களுக்கு சேலைகள், ஐந்து பேருக்கு தையல் இயந்திரம், பத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, நான்கு பேருக்கு இஸ்திரி பெட்டி, இரண்டு குழுக்களுக்கு கேரம் போர்டு, இரண்டு குழுக்களுக்கு செஸ் போர்டு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் இந்த பொதுக் கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமைக் கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் செல்வமணி நடுப்புத்தகை ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.