பொன்னேரி,மீஞ்சூர் பகுதிகளில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மீஞ்சூரில் திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
பொன்னேரியில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு பொன்னேரி நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.
அதேபோன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஊர்வலமாக வந்து பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.