Close
டிசம்பர் 25, 2024 1:47 மணி

தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றிய பணத்தை பெற்றுத் தர எஸ்பியிடம் புகார் மனு..!

தீபாவளி சீட்டு பணத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி 18 நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் பெற்று தலைமறைவான காஞ்சிபுரத்தை சேர்ந்த ரோஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் , செய்யாறு நகரில் ஏ பி ஆர் தீபாவளி சீட்டு நிதி நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு செயல்பட்டு வந்தது.

இந்த சீட்டு நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலங்களிலும் முகவர்கள் உறுப்பினர்களை சேர்த்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த நிதி நிறுவனம் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் பணத்தை உறுப்பினர்களுக்கு செலுத்த இயலாத நிலையை ஏற்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முகவர் ரோஜா என்பவர் பல்வேறு உறுப்பினரிடம் பணத்தைப் பெற்று தருவதாகவும் அதற்கு முன் பணம் கட்டினால் முழு பணமும் அளிப்பார்கள் என கூறிய வகையில் 18 நபர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.

இதனை செலுத்திய நிலையில் முழு பணத்தைக் கேட்டு உறுப்பினர்கள் அவர்களது வீட்டுக்கு சென்ற போது அவர்களை தரக்குறைவாக பேசியும் பணத்தை திருப்பி தர இயலாது என கடுமையான வார்த்தைகளால் கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் பாதிக்கப்பட 18 நபர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாங்கள் இழந்த பணத்தை காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரோஜாவிடமிருந்து மீட்டு தரக் கோரி மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.

பல மாவட்டங்கள் அல்லது பல மாநிலங்களிலும் இவர்கள் உறுப்பினர்களை சேர்த்து அவர்களிடம் இருந்து பணம் பெற்றதும் அவர்கள் அனைவரும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top