Close
டிசம்பர் 25, 2024 4:43 மணி

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் 1000 பேர் மனு

திருவாரூர் நகராட்சியுடன் தண்டலை, பெருங்குடி, வேலங்குடி, தேவர்கண்ட நல்லூர், இலவங்கார்குடி, கீழக்காவாதுகுடி உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களது கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களது கிராமம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

மேலும் வரி உயர்வு போன்றவற்றை மக்களால் செலுத்துவதற்கு உரிய வருவாய் இல்லை எனவும், இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top