படம் பிடிக்காமல் திரும்பினால் நேரத்துக்கு ஏற்ப கட்டணம் வாபஸ் வழங்கப்படும் என பிவிஆர் ஐநாக்ஸ் புது திட்டம் அறிவித்துள்ளது.
தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் சென்றால், படம் பிடிக்கவில்லை என்றால் கூட முழுப் படத்தையும் பார்த்துவிட்டு வருகிறோம். இனி அப்படி அவஸ்தைப்பட வேண்டாம்.
எவ்வளவு நேரம் படம் பார்க்கிறோமோ, அதற்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதுமானது. அதாவது ஒரு படம் பிடிக்கவில்லை என்று பாதியில் வெளியேறினால் 50 சதவிகித டிக்கெட் கட்டணமும் 25 முதல் 50 சதவிகித படம் மீதி இருக்கும்போது 30 சதவிகித கட்டணமும் 50 சதவிகிதத்துக்கு மேல் படம் இருக்கும்போது வெளியேறினால் 60 சதவிகிதத் தொகையும் திருப்பித் தரப்படும்.
சில காரணங்களால், படத்தின் ஆரம்பத்தில் 30 நிமிடக் காட்சிகளைத் தவற விட்டால் அதற்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை. குறிப்பிட்ட 30 நிமிடம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இப்படியொரு வித்தியாசமான திட்டத்தை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ‘ஃபிளக்ஸி ஷோ’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.