பொன்னேரி ஆல்மைட்டி கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் உள்ள ஆல்மைட்டி காட் அசெம்பிளி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பாதிரியார் லாரன்ஸ் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் கிறிஸ்துவ பெருமக்கள் பெண்கள் குழந்தைகளுடன் சமாதானத்தை பிரதிபலிக்கும் விதமாக வெண்ணிற புத்தாடை அணிந்து தேவாலயத்திற்கு வந்தனர்.
பாதிரியார் லாரன்ஸ் முன்னிலையில் ஏசுபிரானின் பிறப்பை விளக்கும் வகையில் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டது.இதனை தொடர்ந்து இயேசு பிறந்ததை நினைவுகூரும் விதமாக சிறுவர் சிறுமியர் உற்சாகத்துடன் நடனமாடினர்.இதையடுத்து கிறிஸ்து தாத்தாவுடன் சிறுவர் சிறுமியர் வண்ண வண்ண ஆடை அணிந்து ஆடல் பாடல் என கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.