அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குறவன்குளத்தில் பிரேம் நண்பர்கள் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தியது.
இந்த போட்டியை சின்னஊர்சேரி, தி.மு.க. கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஆனந்த் தொடங்கி வைத்தார். முதல் பரிசை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசி அணியினருக்கு ரூ.15,000 ரொக்க தொகையை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி.குருசாமி சார்பாக நவீன் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
2–ம் பரிசை மதுரை வி.புதூர் பிடாரி அம்மன் கிரிக்கெட் கிளப்பிற்கு ரூ.10,000 ரொக்க பரிசை குறவன்குளம் எஸ்.பால்ச்சாமி–லெட்சுமி, வே.லெனின்பிரபு (தமிழ்நாடு காவல் துறை), வே.ஸ்டாலின்பிரபு(இந்திய ராணுவம்) ஆகியோர் வழங்கினர்.
3–ம் பரிசை மதுரை பிரண்ட்ஸ் கிளப் அணியினருக்கு ரூ.8,000 ரொக்க தொகையை ஏ.அப்பாஸ் மந்திரி அய்யூர் எம்.ஏ.பிரிக்ஸ், பாலமேடு வழங்கினார். 4–ம் பரிசை குறவன்குளம் பிரேம் நண்பர்கள் அணியினருக்கு ரூ.6,000–த்தை பி.எம்.எஸ்.சரவணன் (புதிய தமிழகம் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர், அய்யூர்) வழங்கினார். 5–ம் பரிசை மதுரை மாவட்டம், வெளிச்சநத்தம் அணியினருக்கு ரூ.4,000–த்தை அலங்காநல்லூர் பொன்.குமார் வழங்கினார்.
அனைத்து போட்டிகளுக்கும் கப் மற்றும் மெடல்களை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி.குருசாமி வழங்கினார்.
சிறப்பு நன்கொடையாளர்கள் ஏ.முகமது அலி ஜின்னா (ஆசிரியர்–சட்டகளம் நாளிதழ் நிறுவனர் – தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, வாசன் (அலங்காநல்லூர் தி.மு.க. 3–வது வார்டு கவுன்சிலர், குறவன்குளம்), கதிர், பொன் ராஜ் (கீழச்சின்னணம்பட்டி), சிறந்த ஆட்டநாயகன் பரிசை டி.செல்வம் (தமிழ்நாடு காவல்துறை, தண்டலை) ஆகியோர் வழங்கினார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு பனியன் அன்பளிப்பாக நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி.குருசாமி மற்றும் நாகா (கல்லணை) ஆகியோர் வழங்கினார்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மதிய உணவு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
முடிவில் சி.ராமச்சந்திரன் உடற்கல்வி ஆசிரியர் நன்றி உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக ரெட்கிராஸ் செயலாளர் ராஜ்குமார், சமூக சேவகர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை சிறப்பாக விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்.