உசிலம்பட்டி :
உசிலம்பட்டியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி கோட்ட அளவிலான மின் வாரிய ஊழியர்கள் ஒன்றிணைந்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு துவங்கிய இந்த பேரணியை, உசிலம்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார், தொடர்ந்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நிறைவு செய்தனர்.
இந்த பேரணியில், உதவி செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், காசிலிங்கம், காத்தமுத்து மற்றும் உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.