Close
டிசம்பர் 26, 2024 7:25 காலை

அலங்காநல்லூர் அருகே புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை..!

தார் சாலைக்கான பூமி பூஜை

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரியஊர்சேரி பிரிவிலிருந்து முடுவார்பட்டி கண்மாய் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு, உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம், ஒன்றிய துணைச் செயலாளர் அருண் விஜயன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசு, தனுஷ்கோடி, அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தவசதிஷ், யோகேஷ், பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகுபிள்ளை பொம்மன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top