Close
டிசம்பர் 26, 2024 8:30 காலை

மதுரை மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

மதுரை மாநகராட்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை :

மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமானது,மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 20 மனுக்களும், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 1 மனுவும், காலிமனை வரி மற்றும் புதிய வரிவிதிப்பு வேண்டி 3 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு தொடர்பாக 48 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 13 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 1 மனுவும் என மொத்தம் 87 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெறப்பட்டது.

நடைபெற்ற முகாமில், சொத்துவரியில் பெயர் திருத்தம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாருக்கு உடனடியாக பெயர் திருத்தம் செய்து அதற்கான ஆணையினை மனுதாரருக்கு , மேயர் வழங்கினார்கள்.

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன்,மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் பிரபாகரன், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, செயற் பொறியாளர் சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top