தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குறைந்துள்ளனர்.
தொடர் விடுமுறையின் துவக்கமாக கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான லேடி சீட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, பகோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் தங்கள் குடும்பங்களுடன் சென்று பொழுதை கழித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். தற்பொழுது ஏற்காட்டில் நிலவிவரும் மிதமான சூழ்நிலையை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படைக்கில் பயணம் செய்தனர்.
மேலும் ஏற்காட்டில் அவ்வப்போது தரை இறங்கி வரும் பனிமூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.