Close
ஜனவரி 4, 2025 2:12 காலை

வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2023-24 மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஊரகம் இவைகளுக்கான சமூக தணிக்கையின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, ஊராட்சி செயலர் செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை அறிக்கைகளை தமிழ்நாடு சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம அலுவலர்கள் அறிக்கைகளை வாசித்தார்கள். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top