Close
ஜனவரி 4, 2025 2:02 காலை

தாமல் ஏரியில் நீர் சேமிப்பை அதிகரிக்க எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு..!

தாமல் ஏரி ஆய்வில் காஞ்சி எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரியில் உபரி நீர் வெளியேறி வரும் நிலையினைத் தவிர்க்கும் வகையில் நீர் சேமிப்பினை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து நீர் வள ஆதாரத்துறை அலுவலர்களுடன் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த பருவ மழை மற்றும் புயல் காரணமாக மாவட்டத்தில்75 சதவீத ஏரிகள் முழுமையாக நிரம்பியது.

குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி மிக அதிக கொள்ளளவு கொண்ட நீர் சேமிப்பு ஏரியாகும்.

இந்தப் பருவமழைக்கு காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நிரம்பி வழிந்து உபரிநீர் கடந்த 15 தினங்களாக வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் இப்போது சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் இந்த ஏரிக்கு வந்து உபரி நீர் கலங்கள் வழியாக செல்லும் பகுதியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த ஏரியில் அதிக அளவு நீர் சேமிக்கும் வகையில் மேம்படுத்த எந்த மாதிரி செயல்களை மேற்கொள்ளலாம் என இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் நீர் மேலாண்மை கமிட்டி உறுப்பினர்களும் இதுகுறித்து கேட்டறிந்தார்.

500க்கும் மேற்பட்ட மக்கள் குளித்து வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் அப்பகுதிக்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகை புரிந்து குளித்து மகிழும் நிலையில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top