சமீப காலமாகவே இந்திய பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது.
அதனால் நீண்ட நாட்களாக விவாதப்பொருளாக இருந்துவந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது புத்தாண்டு தொடக்கம் முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூடிவிட முடிவு எடுத்துள்ளது.
இப்போது நாம் எந்த வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படவுள்ளன? அவை எவ்வாறு வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்கலாம்? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன என்பதையெல்லாம் இந்த செய்தியின் மூலமாக அறிந்துகொள்வோம் வாங்க.
2025 ஜனவரி முதல் அமல் படுத்தப்படவுள்ள புதிய விதிகள் மூலம், வங்கி அமைப்பை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், திறமைமிக்கதாகவும் மாற்றுவதே இதன் அடிப்படை மற்றும் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாற்றத்தின் மூலமாக வங்கி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை நோக்கி கொண்டுசெல்லவும், KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்) அப்டேட் செய்யவும் ஊக்குவிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கூறியுள்ளபடி, மூன்று வகையான வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம் வங்கி அமைப்பில் நிலவும் சில குறைபாடுகளை நீக்கிவிட முடியும். மேலும் அவற்றுடன் தொடர்புடைய ஆபத்துகளும் குறையும். இந்த நடவடிக்கையைப்பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் நலனே முக்கியம். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி சேவையை கூடுதல் சிறப்புடன் அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்திய ரிசர்வ் புதிய விதி வழிகாட்டுதல்கள் என்னென்ன?
ஆர்பிஐ கொண்டுவரவுள்ள புதிய விதி 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதன் மூலம் மூன்று வகையான வங்கிகள் கணக்குகள் செயலற்று போகும்.
1. செயலற்ற வங்கி கணக்கு (Dormant Account):
நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள். அதாவது இரண்டு ஆண்டுகளில் எந்த பணப்பரிவர்த்தனையையும் மேற்கொள்ளாத எந்தவொரு வங்கிக் கணக்கும் பொதுவாக செயலற்றதாகவே கருதப்படும்.
2. இன்ஆக்டிவ் வங்கிக் கணக்கு (Inactive Account):
ஒரு வருடமாக எந்த பணப்பரிவர்த்தனையும், எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பது. அத்தகைய கணக்குகள் இன்ஆக்டிவ் கணக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன .
3. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Account)):
நீண்ட காலமாக பணம் எதுவும் டெபாசிட் செய்யப்படாத மற்றும் ஜீரோ பேலன்ஸ் இருக்கும் கணக்குகள்.
RBI புதிய விதிகளின் நோக்கம் என்ன?
1.மோசடியை குறைத்துவிடலாம் :
செயலற்ற கணக்குகளை மூடுவதன் மூலமாக மோசடி மற்றும் அந்த கணக்கின் மூலமாக தவறான பயன்பாடு ஏற்படும் அபாயங்களை தடுக்கமுடியும்.
2. வங்கி செயல்திறன் மேம்படும்:
செயல்படாத கணக்குகளை மூடுவதன் மூலமாக வங்கிகள் தங்கள் மேலாண்மையை திறம்பட மேம்படுத்திக்கொள்ள வகை செய்யும்.
3. டிஜிட்டல் வங்கி ஊக்குவிக்கவும்:
புதிய விதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் நோ யுவர் கஸ்டமர் (KYC) அப்டேட் செய்ய இணைய வங்கிச் சேவைகளின் பயன்பாடு கூடுதலாகும்.
4. KYC அப்டேட் செய்யப்படும் :
புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) விவரங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்ய உதவும்.
வங்கிக் கணக்குகள் தொடர்ந்து செயல்பட என்ன செய்ய வேண்டும்?
1. KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
2. வங்கிக் கணக்கை செயலில் வைத்திருக்க வழக்கமான பணப் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.
3. ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும்.
4. வங்கிக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் டிஜிட்டல் பேங்கிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வங்கிகளின் பொறுப்புகள்
வங்கிகள் புதிய விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,கணக்குகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயனபடுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். மேலும் KYC செயல்முறையை எளிதாக்க வேண்டும்.