Close
ஜனவரி 7, 2025 6:16 மணி

தொகுப்பு வீடு கேட்டு ஒருபக்க மீசையை சரித்துக்கொண்ட ஊர் தலைவர்..!

மீசையை சரித்துக்கொண்டவர்

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் , தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி ஒரு பக்கம் மீசையை சரித்துக் கொண்ட மக்கள் பிரதிநிதி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள மக்களுக்கு என கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 46 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பழமையான வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது அந்த வீடுகளை இடித்து புதிய தொகுப்பு வீடுகளை கட்டித் தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பலமுறை மனு அளித்தோம் பயனில்லாததால் அதே ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக உள்ள தேவசகாயம் ரஜினி என்பவர் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும் வாசலில் அமர்ந்து ஒரு பக்கம் மீசையை சரித்துக் கொண்டார்.

பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பயனளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மக்கள் பிரதிநிதி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top