Close
ஜனவரி 5, 2025 2:00 மணி

குலை நோய் தாக்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் சேதம் : விவசாயிகள் கவலை..!

குலை நோய் தாக்கியுள்ள நெற்பயிர்கள்

உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி :

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, அய்யனார்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆங்காங்கே குலை நோய் தாக்குதலுக்கு உள்ளான நெய்பயிர்கள் கதிர்விடும் பருவத்திலேயே கருகி, காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

குலை நோய் தாக்கம் ஏற்படும் போதே மூன்று முதல் 5 முறை மருந்து தெளித்தும் எந்த பயனுமில்லை என்றும் இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் இந்த குலை நோய் தாக்குதலுக்கு சேதமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, செல்லம்பட்டி வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டும் நேரில் வந்து கூட ஆய்வு செய்யவில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்தும் பெரும் நஷ்டத்தை சந்திக்க உள்ளதாகவும், அறுவடைக்கு கூட கடன் வாங்கி அறுவடை செய்யும் நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top