Close
ஜனவரி 7, 2025 5:56 மணி

பாலமேடு பகுதிகளில் நாட்டு பச்சைமொச்சை சீசன் தொடக்கம்..!

விற்பனைக்கு வந்துள்ள நாட்டு மொச்சை

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர், டி.மேட்டுப்பட்டி. கொழுஞ்சி பட்டி. கெங்கமுத்தூர் கோணப்பட்டி, சுக்காம்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி, சரந்தாங்கி, சேந்தமங்கலம்ராசக்கால் பட்டி மறவபட்டி வலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக பல்வேறு தானியப் பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன் விதைப்பு செய்யப்பட்ட மொச்சை செடிகள் அவ்வப்போது பெய்த கனமழை காரணமாக நன்கு பூ பூத்து காய் காய்த்துள்ளது. தற்போது நன்கு விளைந்த நாட்டு மொச்சை காய்கள் அறுவடைக்கு தயாராகி விற்பனைக்கு வரத் தொடங்கியது.

ஒரு 70 கிலோ. ரூ.80க்கும் மொத்த விலைக்கு கிடைக்கிறது. சில்லறை விலைக்கு ரூ.100 வரை விற்பன ஆகிறது. இந்த நாட்டுபச்சை மொச்சைக்காய் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலமேட்டை சேர்ந்த விவசாயி செல்வம் (48) கூறியதாவது. தற்போது பெய்த பருவ மழை காரணமாக இப்பகுதியில் பச்சைமொச்சை நன்கு விளைச்சல் பெற்றுள்ளது. மேலும் இந்த முறை செடிகள் எந்தவித நோய் தாக்குதலுக்கும் உள்ளாகாமல் அமோக விளைச்சல் பெற்றதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.

ஆரம்ப காலத்தில் சில்லறை விலைக்கு ரூ.100 வரை விலை போவதால் விற்பனைக்கு பச்சை மொச்சை அதிக வரத்து வந்தாலும் கூட விலை 70ரூ.80க்கும் குறையாமல் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் அரிதாக விளைவிக்கப்படும் இந்த பச்சை நாட்டு மொச்சைக்காய் ரூசியாக உள்ளதாகும் இப்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே முழுவதுமாக வெற்றி தீர்ந்து விடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top