Close
ஜனவரி 7, 2025 6:06 காலை

துரைமுருகன் வீட்டு சோதனை டிவியில் பார்த்து அறிந்து கொண்டேன் : அமைச்சர் காந்தி..!

தாமல் ஏரியை பார்வையிட்ட அமைச்சர் காந்தி. உடன் ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் டிவியில் பார்த்து மட்டுமே அறிந்து கொண்டேன் என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

ஏரிகள் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி கடந்த பருவ மழையில் முழுவதும் நிரம்பி உபரி நீர் தற்போது வெளியேறி வருகிறது.

இந்நிலையில் இந்த ஏரியினை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தாமல் ஏரியின் நிலவரம், கொள்ளளவு, தற்போதைய உபரி நீர் நிலவரம் குறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கி எடுத்து கூறினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் ஒன்றான தாமல் ஏரியில் நீர் நிரம்பி 250 கன அடி நீர் இரண்டு கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறுவதாகும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீர் சேமிப்பு அதிகரிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டதாகும்.

இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் தனக்கு விளக்கம் அளித்தும், இனி வருங்காலங்களில் நீர் சேமிப்புக்கு வழிவகை செய்யப்படும் எனவும், இந்த ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் அருகில் உள்ள கிராம ஊராட்சி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டபோது, அந்த செய்தியை டிவியில் பார்த்து மட்டுமே தான் அறிந்து கொண்டதாகும், அது பழைய வழக்கு சம்பந்தமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top