Close
ஜனவரி 10, 2025 7:57 காலை

தொலைந்த செல்போனை மீட்பதற்கு உதவிய அர்ச்சகருக்கு பாராட்டு..!

செல்போனை ஒப்படைத்த அர்ச்சகர் (வெள்ளை தாடியில் இருப்பவர்)

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சனீஸ்வரன் கோயிலில் வாரத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை வழிபடுவதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்த நிலையில் இன்று (4ம் தேதி) காலை கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ஒருவரின் மொபைல் போன் தொலைந்து விட்டதாக அர்ச்சகரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரது மொபைல் நம்பரை வாங்கிய கோயில் அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் தவறவிட்ட மொபைல் நம்பருக்கு தனது மொபைல் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

போனை எடுத்து பேசியவர் சனீஸ்வரன் கோயில் வாசலில் மொபைல் போன் இருந்ததாகவும் அதனை எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக சனீஸ்வரன் கோயிலுக்கு வந்த அவர் மொபைல் போனை அர்ச்சகரிடம் கொடுத்தார்.

அர்ச்சகர் தவற விட்டவருக்கு தகவல் அனுப்பி அவரை வரவழைத்து மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைத்தனர். போனை பெற்றுக் கொண்டவர் தொலைந்த தனது மொபைல் போனை சிறிது நேரத்திலே திரும்ப கிடைப்பதற்கு உதவிய அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் மற்றும் மொபைல் போனை கொண்டு வந்து கொடுத்த தள்ளுவண்டிக்காரர் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top