Close
ஜனவரி 10, 2025 1:23 மணி

தேனி அன்னை மெஸ்சில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அம்மா போல அக்கறை..!

தேனி அன்னை மெஸ் உரிமையாளர் ஹமீதா

தேனி அன்னை மெஸ்சில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதன் பெருமையினை பற்றி பார்க்கலாம் வாங்க…

மதுரை பல்நோக்கு சேவா சங்கம் சார்பில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏலியாஸ்ராஜா தலைமையில் நடந்தது. ஆண்டிபட்டி அன்னை கிரீன்பண்ணை உரிமையாளர் ஹாஜிஹபிபுல்லா, சமூக நல்லிணக்க  தலைவர் முகமதுசபி, உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி அன்னை மெஸ் உரிமையாளர் ஹமீதா பங்கேற்று பேசியதாவது:

திருமணத்திற்கு பிறகு 40 வயதிற்கு மேல் தான் நான் சுய தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

என் கணவரும் அதற்கு ஒத்துழைத்தார். முதன் முதலில் வீட்டு மாடியில் பிராய்லர் கோழிகளை வளர்த்து பிராய்லர் கோழிக்கடை வைத்தேன். சில ஆண்டுகள் நன்கு வியாபாரம் ஆனது, ஆனால் அண்டை விட்டார்களுக்கு கோழி வாடை அசௌரியமாக இருந்ததால் அந்த தொழிலை விட்டு விட்டு பெண்களுக்கான ஹாஸ்டல் தொடங்கினேன்.

மூன்று வேளையும் தரமான  உணவு வழங்கி என் குழந்தைகளை போல் அவர்களை பார்த்துக் கொண்டேன், நிறைய எண்ணிக்கையில்  சேர்ந்தார்கள். அதிலும் லாபம் வந்தது. சில வருடங்களில் அரசு பெண்கள் விடுதிக்கென்று நிறைய விதிமுறைகளை வகுத்ததால் என்னால் தொடர்ச்சியாக லேடிஸ் ஹாஸ்டலை நடத்த முடியவில்லை.

அதற்கு அடுத்து மொத்த விலைக்கு பெண்களுக்கான ஜவுளி துணிகளை தேனிக்கு வாங்கி வந்து என்னுடைய தோழிகளின் தொடர்புகளை எல்லாம் பயன்படுத்தி வீடு வீடாகச் சென்று விற்பனை செய்தேன். அதிலும் லாபம் ஈட்டினேன்.

அதன் பிறகு தேனி சுப்பன் தெருவில் அன்னை மெஸ் என்கிற உணவு கடையை தொடங்கினேன். முழுக்க முழுக்க இராசயனம் கலப்படமில்லாத தரமான எண்ணெய்களை பயன்படுத்தி நானே சமைத்து தரமான சுவையான உணவு வகைகளை வழங்கியதால் ஏறத்தாழ 18 ஆண்டுகளாக தேனியில் அன்னை மெஸ் நன்மதிப்பை பெற்று இருக்கிறது.

எனக்கு ஒரு மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி நல்ல பொருளாதார நிலையில் உள்ளனர். ஆனாலும் நானும் கணவரும் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

அதுதான் எங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது. வீட்டு சுவையோடு நாங்கள் தருகிற உணவு ஆரோக்கியமாக இருப்பதால் எங்களின் தேடி வருகிற வாடிக்கையாளர்களுக்கு திருப்படுத்த வேண்டும் என்பதற்காக நேர மேலாண்மையை சரியாக வைத்துக் கொள்வேன்.

அத்தோடு என்னுடன் பணி புரிகிற அனைத்து பெண்களையும்  நான் குடும்ப உறவுகளாகவே நடத்துவேன். அதனால்தான் நான் இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த முடிகிறது.

என் கணவர் ஹபிபுல்லா ஆண்டிப்பட்டியில் அன்னை கிரீன் பண்ணை என்கிற பெயரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். அவருக்கும் உறுதுணையாக இருந்து வருகிறேன். வருங்காலத்தில் நானும் கணவரும் இயற்கை வேளாண்மையில் முழுமையாய் ஈடுபட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு இருக்கிறது என்றார்.

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணம் ஹமிதா. அத்தோடு தொடர்ச்சியாக உற்சாகமாய் உழைத்துக் கொண்டு இருக்கிற இவரைப் போன்றவர்கள் தான் நம் பெண்களுக்கு அழகிய முன்மாதிரிகள்.

உழைப்பு தான் பேரழகு என்பதற்கு உதாரணமாய் திகழ்கின்ற இவரைத் தான், நம் இளம் தலைமுறை பெண்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அதன் வழியாக ஹமிதாவின்  உழைப்பை நேர மேலாண்மையை சேமிப்பை நம்பிக்கையை மனித வள மேலாண்மையை நம் பெண் குழந்தைகளிம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஆயிரமாயிரம் பாடத்திட்டங்கள் சொல்லித் தரும் படிப்பினையை ஹமிதா வாழ்க்கை நம் பெண்களுக்கு சொல்லித் தரும் என்றால் அது மிகையில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top