சோழவந்தான்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2023 .24 நிதியாண்டிற்கும் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஊரகம் இவைகக்கான,தமிழ்நாடு சமூக தணிக்கையின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சாகுபர் சாதிக் மற்றும் ஊராட்சி செயலர் வேலன் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுஜாதா உள்பட பொதுமக்கள் திட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். சமூக தணிக்கை அறிக்கையிணை தமிழ்நாடு சமூக தணிக்கை வாடிப்பட்டி வட்டார வள அலுவலர் அ.நாகராஜன் மற்றும்
கிராம வள அலுவலர்கள் சமூக தணிக்கை அறிக்கையினை வாசித்தனர்.